சௌபாக்கியா வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தினால்நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர்ச் செய்கையை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இம்முறை உப உணவு பயிர் செய்கையில் ஒன்றான உளுந்து பயிர் செய்கை சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது.
இதன் அங்கமாக பயிரிடப்பட்ட உளுந்து அறுவடை செய்யும் நிகழ்வு கல்முனை அன்பு சகோதர இல்லத்தில் விவசாய விரிவாக்கல் நிலைய போதனாசிரியர் திருமதி எஸ்.கிருத்திகா தலைமையில்இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்கள் கலந்து கொண்டு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் . ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் இவ் உளுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது .இதன் போது அருட்சகோதரர் ஜெ.டொமினிக் , மறு பயிர் செய்கை விவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச் .ஏ.நிஹார்,விவசாய விரிவாக்கல் நிலையத்தின் தொழில்நுட்ப உதவியாளார் கே.குகழேந்தினி மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .கல்முனையில் முதல் முறையாக அதிகமான உளுந்து செய்கை பயிரிடப்பட்டு வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..