வவுனியா, பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்களினால் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.20 வருடங்களாகியும் தமக்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை, மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை செய்தி
0 Comments
No Comments Here ..