15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ் சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் கொழும்பு சென்று திரும்பியவர்கள். மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 அவர் அண்மைய நாளில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றார். அந்த இறுதிச் சடங்கில் புத்தளம் உள்ளிட்ட வெளிமாட்டங்களைச் சேர்ந்தோரும் பங்கேற்றிருந்தனர். அதனையடுத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது




வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு