03,May 2024 (Fri)
  
CH
தொழில்நுட்பம்

குறைவான விலையில் 4G சிப்செட்டுடன் அறிமுகமான பிரபல ஹூவாய் ஸ்மார்ட்போன்!

ஹூவாய் நிறுவனம் அதன் பி 40 மாடலின் 4ஜி வேரியண்ட்டை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஹூவாய் பி 40 ப்ரோவுடன் ஹூவாய் பி 40 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

4ஜி வேரியண்ட்டை பொறுத்தவரை, 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹூவாய் பி 40 4 ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.45,064 க்கு அறிமுகமாகி உள்ளது.

இப்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஜே.டி.காம் வழியாக வாங்குவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளது, இது டார்க் ப்ளூ மற்றும் ஃப்ரோஸ்ட் சில்வர் வண்ண வகைகளில் விற்பனையாகும்.

நினைவூட்டும் வண்னம் ஹூய் பி40 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.66,300 க்கு அறிமுகமானது.

ஹூவாய் P40 4G ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

அம்சங்களை பொறுத்தவரை, ஹூவாய் பி 40 4 ஜி மாடலானது 6.1 இன்ச் அளவிலான புல் எச்டி + டிஸ்ப்ளேவை, 2340 x 1080 பிக்சல்கள் என்கிற ஸ்க்ரீன் ரெசல்யூஷன், 19.5: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கிரின் 990 4 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு வெளியான 5ஜி மாறுபாடானது கிரின் 990 5 ஜி மூலம் இயங்குகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான இண்டர்னஸ்ல் ஸ்டோரேஜால் ஆதரிக்கப்படுகிறது. தவிர அதிக சேமிப்பகத்திற்காக என்எம் கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில், 50 எம்.பி அல்ட்ரா விஷன் கேமரா (வைட் ஆங்கிள், எஃப் / 1.9 லென்ஸ் + 16 எம்.பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா (எஃப் / 2.2 லென்ஸ்) + 8 எம்.பி டெலிஃபோட்டோ கேமரா (எஃப் / 2.4 லென்ஸ், ஓஐஎஸ்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஐஆர் கேமராவுடன் 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது.

சீனாவின் ஜே.டி லிஸ்டிங் ஆனது இதன் பேட்டரி திறனை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் இது 3800 எம்ஏஎச் பேட்டரியை 22.5 டபிள்யூ ஹவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் (5ஜி வேரியண்ட்டில் உள்ள அதே பேட்டரியை) பேக் செய்ய வேண்டும். எல்லாம் ஒருபக்கம் இருக்க இதன் Android OS பதிப்பு பற்றிய எந்த தகவலும் இல்லை.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது Wi-Fi (802.11a / b / g / n / ac / ax, 2 x 2 MIMO, HE160, 1024 QAM, 8 Spatial-stream Sounding MU-MIMO), ப்ளூடூத் 5.1 (ஆதரவு BLE, SBC, AAC, LDAC), USB Type-C, GPS, GLONASS, BeiDou, NavIC, NFC மற்றும் டூயல் சிம் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது.




குறைவான விலையில் 4G சிப்செட்டுடன் அறிமுகமான பிரபல ஹூவாய் ஸ்மார்ட்போன்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு