டிம்பாலேண்ட் ஒரு உலக பிரபலம் வாய்ந்த இசை கலைஞர் ஆவார். அமெரிக்காவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் இவருக்கென்று ஒரு ரசிக பட்டாளமே உண்டு. அமெரிக்காவில் இசை துறைக்கு வழங்கப்படும் க்ராமி விருதை பெற்றவை டிம்பாலேண்ட்.
இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எப்போதும் தனது புது விதமான இசைகளை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்சமயம் அவர் இயற்றிய இசை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால் இதை கேட்ட தமிழ் இசை ரசிகர்கள் இது இளையராஜாவின் இசை என்றும் அதை டிம்பாலேண்ட் காபி அடித்து விட்டார் எனவும் கூறுகின்றனர்.
இளையராஜா இசையமைத்த அந்தி மழை பொழிகிறது என்னும் பாடலின் நடுவே வரும் இசையைதான் அவர் போட்டுள்ளார் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் கமெண்டுகளில் டிம்பாலேண்ட் ரசிகர்களுக்கும் இளையராஜா ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து வருகிறது.
இதனிடையே இந்த வீடியோ இதுவரை 50,000 த்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை வாங்கியுள்ளது.
இதில் கமெண்டில் இளையராஜா ரசிகர்கள் பலரும் எழுதி வருகின்றனர். அதில் ஒருவர் “இதன் நிஜ பாடல் எங்கள் இளையராஜா இசையமைத்த அந்தி மழை பொழிகிறது பாடலில் உள்ளது” என கூறியுள்ளார்.













0 Comments
No Comments Here ..