21,Nov 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

ஜோதிட உலகத்தில் இருக்கும் 9 கிரகத்திற்கு சொந்தமான "உடல் உறுப்புகள்"

இந்தப் பதிவு மிக மிக முக்கியமான பதிவாகும்.ஜோதிட உலகத்தில் இருக்கும் 9 கிரகத்திற்கு சொந்தமான "உடல் உறுப்புகள்".ஒன்பது கிரகத்திற்கு சொந்தமான "நோய்கள்"

மற்றும் கால புருஷ தத்துவம் அடிப்படையில் "12 பாவ உடல் உறுப்புகள்" இதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


★ஜோதிடம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் ஜோதிட ஆர்வலர்கள் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதை குறித்துக் கொள்ளுங்கள்.


★(12 பாவ உடல் உறுப்புகள்)


(★1 பாவம்)


தலை ,முகம் ,மூளை ,ரோமம், பருமன் தோற்றம்


(★2 பாவம்)


முகம்,கண்கள், பற்கள், தொண்டை மூக்கு, குரல்வளம்,குரலின் தன்மை


(★3 பாவம்)


காதுகள்,கழுத்து, தோள்பட்டை கைகள்,கைவிரல்கள், மூச்சு குழாய்


(★4 பாவம்)


மார்பகம்,நுரையீரல்,உணவுக்குழாய்


(★5 பாவம்)


இருதயம், ஈரல், மண்ணீரல் கணையம், சிறுகுடல்,பித்தப்பை


(★6 பாவம்)


கிட்னி,குடல் பகுதி


(★7 பாவம்)


கர்ப்பப்பை,கர்ப்பப்பை குழாய் மலக்குடல், கருமுட்டை, அடிவயிறு சிறுநீர்க்குழாய், கிட்னி


(★8 பாவம்)


ஜனன உறுப்புகள், ஆசன வாய் மலத்துவாரம்,ஆணுறுப்பு பெண்ணுறுப்பு


(★9 பாவம்)


இடுப்புப்பகுதி,தொடைப்பகுதி


(★10 பாவம்)


முழங்கால், மூட்டு பகுதி, எலும்பு மண்டல மஜ்ஜை


(★11 பாவம்)


கால்கள் எலும்பு மண்டலம் கணுக்கால்


(★12 பாவம்)


பாதம்,கால் விரல்கள்,அடிப்பகுதி.


★(9 கிரகத்திற்கு சொந்தமான நோய்கள்)


★1.(சூரியன்)


எலும்பு முறிவு, கண் எரிச்சல், செரிமான அமைப்பில் ஏற்படும் பிரச்சனை,தலைவலி சம்பந்தப்பட்ட பிரச்சனை,சைனஸ்,கண்பார்வை பிரச்சனை,பார்வை குறைபாடு,

காசநோய்,Heart attack,இருதயக் கோளாறு, இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தைராய்டு, எலும்புத் தேய்மானம், முதுகு தண்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை,கால்சியம் குறைபாடு ,BP problem.


★2.(சந்திரன்)


பால் சுரப்பி நோய்கள், அசுத்த நீரால் ஏற்படும் நோய்கள், குடல்புண், ரத்தக் குறைவு, உணவால் ஏற்படும் நோய் செரிமான கோளாறு, அஜீரண கோளாறு, குடல்வால் நோய்கள், வாந்தி, தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு, சளியால் ஏற்படும் நோய்கள், அரிப்பு பிரச்சனை, மன அழுத்தம் சார்ந்த நோய்கள், ரத்த துடிப்பு,நினைவாற்றல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, மார்பக கட்டி,இரைப்பை புண்,குடல் புண் ,ஜலதோஷம், கபம்,

முகப்பரு சம்பந்தப்பட்ட பிரச்சனை,

ஹீமோகுளோபின் குறைபாடு,food poison,blood circulation problem,Period problem.உணவு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை,நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனை, மனநல வளர்ச்சி குறைபாடு,ரத்தம் வடிதல்,psychology effect.ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,அல்சர் problems.


★3.(செவ்வாய்)


உடல் உஷ்ண நோய்கள்(body heat)

பெரியம்மை,சின்னம்மை, எலும்பு மஜ்ஜை சார்ந்த பிரச்சனை,கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை, டைபாய்டு உடலில் பலம் குறைவு,விஷப் புண்கள்,ஜன்னி நோய்கள்,

வைட்டமின் குறைபாடு சார்ந்த நோய்கள், உடல் வீக்கம், எலும்பு வீக்கம்,மூல நோய் குஷ்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினை,வெட்டுக் காயங்கள்,தசைப்பிடிப்பு ,மூட்டுவலி சம்பந்தப்பட்ட பிரச்சனை,joints problems,பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.


★4.(குரு)


கல்லீரல்,கணையம், மண்ணீரல் சிறுநீரகம் இது சார்ந்த பிரச்சினைகள் மற்றும் நோய்கள்,ஈரலில் ஏற்படும் நோய்கள், ஊமை, வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை, தசைநார்கள் பிரச்சனை, உடல் பருமன் சார்ந்த பிரச்சனை,

உடல் வீக்கம், முகவீக்கம் ,நாவறட்சி, கணைய இயக்கம் சார்ந்த பிரச்சனை,

brain cancer,கல்லீரல் புற்று நோய், மஞ்சள் காமாலை, ஞாபக மறதி, மூக்கு, சம்பந்தப்பட்ட பிரச்சனை,

Brain stroke,மூளை வாதம், முடக்கு வாதம்,கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை.மூளையில் ஏற்படும் பிரச்சினைகள்.Autism சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.


★5.(சுக்கிரன்)


நீரிழிவு சம்பந்தப்பட்ட பிரச்சனை சிறுநீரகக் கோளாறு,கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனை,சர்க்கரை நோய், உப்பு நோய்,பால்வினை நோய்கள் ,முகப்பருக்கள், சிறுநீரக கற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை,

உடலுறவு சம்பந்தப்பட்ட பிரச்சினை பாலியல் நோய்கள்,கிட்னி,கிட்னியில் கல் அடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,கர்ப்பப்பை ,கர்ப்பபை கட்டிகள் சம்பந்தப்பட்ட problem.,சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினை,விந்து உற்பத்தி பாதிப்பு,விந்துப்பை problem.

நீரிழிவு சம்பந்தப்பட்ட பிரச்சனை.

பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை,Sexual problems,HIV.,AlDS உயிர்க்கொல்லி நோய்,Uterus problem,ஆணுறுப்பு பெண்ணுறுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.


★6.(ராகு)


சுவாசப் பிரச்சனை, நுரையீரலில் ஏற்படும் பிரச்சனை, மண்ணீரல் வீக்கம்,உதட்டு புண்கள், விஷபூச்சிகளால் ஏற்படும் நோய்கள், பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள், பிளவை கட்டிகள், அலர்ஜி, முடி சார்ந்த பிரச்சினைகள், கொப்பளங்கள், உடல் ரணம் சார்ந்த நோய்கள், காலரா,மருக்கள் சார்ந்த நோய்கள்,ஆஸ்துமா,Cancer,

புற்றுநோய்கள்,நெறிகட்டிகள்,

wheezing problems,மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை,சுவாசக் நாளம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்.


★7.(புதன்)


நாக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை, காது கேளாமை, காதில் ஏற்படும் பிரச்சினைகள், நரம்புத் தளர்ச்சி,

தோல் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சனைகள், ஜவ்வு மற்றும் விரல் சார்ந்த பிரச்சினை, குருத்தெலும்பு சார்ந்த பிரச்சனை,

சினைப்பைகள் சார்ந்த பிரச்சனை, ரோகம் சார்ந்த பிரச்சனை, மூக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை, மூளை சார்ந்த நோய்கள்,

சிற்றெலும்புகளில் ஏற்படும் பிரச்சனை,கைகள் மற்றும் தொப்புளில் ஏற்படும் பிரச்சனை மற்றும் நோய்கள்.


★8.(சனி)


கால்வெடிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை,பாத வெடிப்பு ,காலில் ஏற்படும் பிரச்சனைகள்,உடல் மந்தம் சோம்பேறித்தனம், மயக்கம், உடல் சோர்வுகள்,கால் வலிப்பு, சிறுங்குடல்,பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ,மலக் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, ஆசனவாய் சார்ந்த பிரச்சனைகள், உடல் கழிவு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் நோய்கள்,இளநரை, தசைபுண்கள்,

Critical disorders,ஊனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.நொண்டி,உடல் குஷ்டம் சார்ந்த நோய்கள்,உடல் அங்கஹீனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்.


★கேதுவிற்கு சொந்தமான நோய்கள் என்று எதுவும் கிடையாது.


(★ஓவ்வோரு கிரகத்திற்கு சொந்தமான உடல் உறுப்புகள் சிலவற்றை )


★1.(சூரியன்)


வலது கண், எலும்பு மண்டலம் மோதிர விரல்,


★2.(சந்திரன்)


 இடதுகண், மார்பகம், வயிறு,

 ரத்தம்.


★3.(செவ்வாய்)


பற்கள், தசைகள், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள்,புருவம் எலும்பு மஜ்ஜைகள்,தண்டுவடம் மூக்குத்தண்டுகள்


★4.(புதன்)


நாக்கு, தொண்டை, கழுத்து,   காது,தோள்பட்டை, கைகள், கை விரல்கள்,உணவுக் குழாய், நுரையீரல்


★5.(குரு)


மூக்கு ,வாய், தொடைகள்,மூளை கொழுப்பு,நாசி


★6.(சுக்கிரன்)


கர்ப்பப்பை, சிறுநீர்,கிட்னி ஆணுறுப்பு ,பெண்ணுறுப்பு,விந்துப்பை கண்ணங்கள்,


★7.(சனி)


பாதம்,குதிகால்,முழங்கால்,

ஆசனவாய்.


★ராகு கேதுவிற்கு சொந்தமான உடல் உறுப்புகள் என்பது கிடையாது ஆனால் ராகுவிற்கு சொந்தமான நோய்கள் மட்டும் இருக்கிறது.


★ஒவ்வொரு கிரகத்திற்கு சொந்தமான உடல் உறுப்புகளை பற்றி ஒவ்வொரு கிரகத்திற்கும் சொந்தமான நோய்களில் குறிப்பிட்டிருக்கிறேன் அதில் பார்த்துக் கொள்ளவும்.


★இதில் எந்த கிரகம் சம்பந்தப்பட்ட நோய் நமக்கு வரும் என்பதை முன்கூட்டியே நாம் ஜாதகத்தை வைத்து கண்டுபிடித்து விட்டால் அந்த கிரகம் சம்பந்தப்பட்ட நோய் விஷயத்தில் நாம் கவனமாகவும் விழிப்புணர்உடனும் இருந்து கொள்ளலாம்.


★ஜாதகத்தை வைத்து நமக்கு எந்த கிரகம் சம்பந்தப்பட்ட நோய் வரும் என்பதை என்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்றார் போல் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அந்த கிரகம் சம்பந்தப்பட்ட நோயிலிருந்து நாம் தப்பிக்க இயலும்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.




ஜோதிட உலகத்தில் இருக்கும் 9 கிரகத்திற்கு சொந்தமான "உடல் உறுப்புகள்"

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு