03,May 2024 (Fri)
  
CH
ஆரோக்கியம்

பெண்களின் மாதவிடாய் வலியை போக்கும் ஆசனம்

பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது. மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

செய்முறை:

தண்டாசனத்தில் உட்காரவும். இரு முழங்கால்களையும் மடக்கி, உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் குத, குய்யத்தின் மத்தியில் படும்படி வைக்கவும்.

கை விரல்களை ஒன்றாகச் கோர்த்து உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு நேராக நிமிரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் சில முறை மூச்சை இழுத்துவிடவும். மூச்சை வெளியேவிட்டபடி முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டு வந்து, தாடை தரையை தொடும்படி வைக்கவும். இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்தவேண்டிய இடம் : தொடைகளின் சந்துப் பகுதியிலும், மூலாதாரம் அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின்மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு: சிலருக்கு இப்பயிற்சியில் உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படியாமல் மேலே தூக்கிக்கொண்டு நிற்கும். அத்தகையவர்கள் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை காலை, மாலை செய்து வந்தால் சில நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும். கால்கள் இரண்டும் தரையில் படிந்த பிறகு நிதானமாக முன்குனிந்து எவ்வளவு வளையமுடியுமோ அந்த அளவுக்கு வளைந்து அதே நிலையில் பயிற்சி செய்யவும். நாள் படப்பட வளையும் தன்மை அதிகாத்து தாடையால் தரையை தொடும் நிலை கைகூடும்.

பயன்கள்: விரைவாதத்திற்கு பயனுள்ளது. மலட்டுத்தனம் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகளை நீக்கி, வலுப்படுத்துகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக அமையும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகள் நீங்கும். பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது. மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பெண்களின் மாதவிடாய் வலியை போக்கும் ஆசனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு