இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸைனொபார்ம் தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் (VOG) நிறுவனத்தினால் சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, ஏனையவர்களுக்குப் போன்று தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடக்கூடாது என்றும், இதற்காக விசேட வழிமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகப்பேற்று (VOG) பெண்ணோயியல் மருத்துவர்கள் நிறுவனத்தின் செயலாளர் வைத்தியர் சாமிந்த மாதொட்ட தெரிவித்தார்.
அத்துடன், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று (VOG) பெண்ணோயியல் வைத்தியர் மயுரமாண தெவலகேயும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு நியூமோனியா நிலைக்கு தள்ளப்படுகின்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இலங்கையில் ஒரு சிகிச்சை நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..