பிரித்தானிய கொரோனா திரிபுக்கு மேலதிமாக இந்திய திரிபும் இலங்கையில் பரவி வருகிறதா? என்பது தொடர்பான ஆய்வு இடம்பெறுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி விஞ்ஞான மூலக்கூற்று மருத்துவ ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
பி.1.1.7 என்பது பிரித்தானிய திரிபாகும். இலங்கையில் அதிகமாக பரவிய திரிபு இதுவாகும். ஆனால். பி.1.617 என்பது இந்திய திரிபாகும்.
வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள ஒருவரிடமிருந்து இந்தத் திரிபை காணக்கூடியதாக இருந்தது. இது சமூகத்தில் இருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்ச்சியாக ஆராய்ந்து பார்க்கவேண்டிய விடயமாகும்.
இந்தியா உள்ளிட்ட ஏனைய தெற்காசிய நாடுகளில் இந்தியத் திரிபு வேகமாக பரவி வருகின்றது. இலங்கை, கடல் வழியாக இந்தியாவுக்கு மிக அருகில் உள்ளது.
படகு உள்ளிட்ட வேறு மார்க்கங்களில் பயணிகள் வரமுடியும். அது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
0 Comments
No Comments Here ..