யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி மாவட்டங்களில் இன்று கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது.
யாழ் மாவட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கையில் , தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்தொற்று நிலமையை கருத்தில் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வடமாகாண மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, ஆய்வின் அடிப்படையில் கொவிட் 19 வைரசு தொற்று அச்சுறுத்தல் அபாய நிலையில் உள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்..
யாழ்ப்பாணத்தில் காலை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை தடுப்பூசி ஏற்றப்படும். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 13 மத்திய நிலையங்கள் ஊடாக இந்தப் பணி முன்னெடுக்கப்படுவதாக. மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
இதேவேளை, மேல் மாகாணம் உட்பட காலி, மாத்தறை, குருநாகல் ஆகியமாவட்டங்களில் தற்போது தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நாட்டில் 21 ஆயிரத்து 477 பேருக்கு சயினாபாம் கொவிட் 19 தடுப்பூசி முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதனை பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 1508 ஆகும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..