04,Dec 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை உப்பில் ஆபத்தா? சமூகத்தில் தீ போல் பரவும் புதிய செய்தி

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பலால் கடல்நீரில் பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்பட்டு இருந்தாலும், அது உப்பு உற்பத்திக்குத் தடையாக இருக்காது என்று ஹம்பாந்தோட்டை உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் வழக்கறிஞர் நிஷாந்த சந்தபரண தெரிவித்தார்.

மேலும் நாட்டில் உப்புக்கான பற்றாக்குறை இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

கப்பலின் தீ நாட்டின் உப்பு உற்பத்தியை பாதிக்கும் என்று சமூகத்தில் பல்வேறு வதந்திகள் வேகமாக பரவி வருவதால் நுகர்வோர் அதிக உப்பு பக்கெட்டுகளை வாங்க கடைகளுக்கு வருகின்றார்கள்.

கடல் நீரில் எதைச் சேர்த்தாலும் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது. கப்பல் விபத்து அல்லது தீ காரணமாக கடல்நீரில் இரசாயனம் சேர்க்கப்பட்டாலும், தேவையற்ற இரசாயனங்கள் அனைத்தும் உப்பு உற்பத்தியில் ஆவியாதல், அதிக வெப்பத்தால் அகற்றப்படுகின்றன.

மீதமுள்ள சோடியம் குளோரைட் மட்டும் உப்பு தயாரிக்க பயன்படுகிறது, இதனால் மனித நுகர்வுக்கு தகுதியற்ற எதுவும் உப்பில் இல்லை.

இப்போது கூட, கடல் நீரில் பலவிதமான இரசாயனங்கள் உள்ளன. இந்த கப்பல் மூலம் மட்டுமல்லாமல், பிற வழிகளிலும் கடல் நீரில் பல்வேறு பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றன.

எனினும் உப்பு உற்பத்தியில் ஆவியாதல் மூலம் அதையெல்லாம் பிரித்தெடுக்க முடியும் என்று வழக்கறிஞர் நிஷாந்த சந்தபரண கூறுகிறார்.





இலங்கை உப்பில் ஆபத்தா? சமூகத்தில் தீ போல் பரவும் புதிய செய்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு