16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கிண்ணியா - 12 கிராமசேவையாளர் பிரிவுகளின் முடக்க நிலை தொடர்ந்து நீடிப்பு

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் முடக்கப்பட்டுள்ள 12 கிராமசேவையாளர் பிரிவுகளின் முடக்க நிலை தொடரும் என தெரியவருகின்றது.

கிண்ணியா பிரதேச கொரோனா ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (02)இடம் பெற்றது.

இதன்போது சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளரின் கூற்றுப்படி முடக்க நிலை தொடரும் என தெரியவருகின்றது.

தோற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவது மரண வீதம் அதிகரித்து காணப்படுவதே தடை நீடிப்பதற்கான காரணமாக இருக்கின்றது.

மேலும் பிரதேசங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு அமைந்தாலும் வர்த்தக மற்றும் பொருளாதார மையங்கள் ஒரு சில பிராந்தியங்களில் இருப்பதனால் மக்கள் தங்களை கட்டுப்பாடின்றி சுதந்திரமாக நடமாடி நோய்த்தொற்றை அதிகரித்து விடுவார்கள் என்கின்ற ஒரு அச்சம் இருப்பதன் காரணத்தினால் இந்த முடக்கம் தொடர்ந்து வைத்திருந்து தொற்று வீதத்தையும் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டுமென இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கிண்ணியா - 12 கிராமசேவையாளர் பிரிவுகளின் முடக்க நிலை தொடர்ந்து நீடிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment

<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு