நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் பெற்றுள்ள நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அத்தியாவசிய சேவைகள் குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி நேற்று வெளியிட்டுள்ளார்.
இதன்படி, லங்கா சதோச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், உணவு விநியோக துறைசார் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பான வகைகள், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக விநியோகிக்கப்படும் ஏனைய அனைத்து நுகர்வு பொருட்கள் விநியோகம், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் நெறிமுறைப்படுத்தல் தொடர்பான அனைத்து கருமங்களும் சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு இணங்க நேற்று நள்ளிரவு முதல் அனைதது சதோச விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சிய சாலைகளும் திறக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன உரியஅதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்
0 Comments
No Comments Here ..