தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அபயாராமயவின் மாநாயக்கத் தேரர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக சத்தம் போட்டால் கவனம் என தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல்களை கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை சரியான வழியில் இட்டுச் செல்லவே தாம் போராடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனந்த தேரர் தற்போதைய பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியவர்களில் ஒருவர் என்பதுடன், பிரதமர் மஹிந்த உள்ளிட்ட தற்போதைய ஆட்சியாளர்கள் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிரான ஊடக சந்திப்புக்களை அபயாராமயவில் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..