கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் கொள்கலன் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவை எதிர்கொள்ள இலங்கை தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையை சமாளிக்க இந்தியாவின் கடலோர காவல்படை மற்றும் இந்தியாவிலிருந்து வரும் கப்பல்கள் காத்திருப்பதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா இன்று மாலை வெளியிட்ட தகவலின்படி கப்பலின் ஒரு பகுதி தண்ணீருக்கு மேலே இருந்ததாகவும், மீதமுள்ளவை மூழ்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதாரத் துறை அமைச்சர் நாலக கொடஹேவாவின் தகவல்படி கப்பலின் ஒரு பகுதி கடற்பரப்பில் மோதியபோதும் கப்பல், இலங்கை கடற்கரையிலிருந்து தொலைவில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிகாரிகள் இப்போது எண்ணெய் கசிவை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் சேதத்தை குறைக்கவும் தயாராகி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கப்பலில் இருந்து எண்ணெய் கசிவை சமாளிக்கும் திறன் கொண்ட ஒரு கப்பல் காத்திருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் 297 தொன் கனரக எரிபொருள் மற்றும் 51தொன் கடல் எரிபொருள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கப்பலிடம் கோரவேண்டிய இழப்பீட்டு தொடர்பில் சட்ட மா அதிபர் நாளை சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..