வெளியிடங்களிலிருந்து கொழும்பு நகரத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பயண கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல தனியார் நிறுவனங்களின் பிரதானிகளினால் அத்தியாவசிய சேவைக்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டமையே இதற்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக சேவை வழங்காத பல நிறுவனங்கள் இவ்வாறு ஊழியர்களை அழைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கொழும்பில் மக்கள் மற்றும் வாகனங்கள் குவிந்துள்ளன. இதன்மூலம் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..