எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இன்று முதல் பாண், பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பெரும் பிரச்சினைகள் இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்தது.
அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகள் காரணமாக சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். அரசாங்கம் பாம் ஒயிலை தடை செய்தது.
அதன் விலையும் அதிகரித்தது. ஒரு வருடத்திற்கு முன்னர் 20 லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 4800 ரூபா.
தற்போது அதன் விலை 13500 ரூபா. வெதுப்பக உணவுகளில் 30 வீதமான உணவுகள் சூன் பாண் முச்சக்கரவண்டிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.
பெட்ரோல் விலை அதிகரிப்பை எப்படி தாங்கி கொள்வது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், வெதுப்பக உரிமையாளர்கள் தமது உணவுகளை தாம் விரும்பிய விலைக்கு அதிகரிப்பார்கள்.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உணவுகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும். உப்பு கல் முதல் அனைத்து பொருட்களும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை வெதுப்பக உரிமையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..