பியகம, கோனவல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
வீட்டு தலைவர் உட்பட மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பியகம சுகாதார வைத்திய அதிகாரி சமப் பெரேரா தெரிவித்துள்ளார்.
கோனவல பிரதேசத்தில் வீடு ஒன்றின் தலைவரான 51 வயதுடைய தந்தை கடந்த முதலாம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் 71 வயதுடைய தந்தை கடந்த 4ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவரது தாயாரான 69 வயதுடைய பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் மேலும் 4 பேர் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..