15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

பஷில் வருவது நல்ல விடயம் தான் ஆனால் ஒன்றும் சூரர் அல்ல - அமைச்சர் விளக்கம்

வாழ்வாதாரம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றம் வந்தவுடன் எரிபொருள் விலையை குறைப்பதற்கு அவர் ஒன்றும் சூரர் அல்ல என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்..


நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,


பொதுஜன பெரமனவின் தேசிய அமைப்பானர் பஷில் ராஜபக்க்ஷவின் நாடாளுமன்ற வருகை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிற்கும் பலமாக அமையும்.


பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் இடம் பெற்ற தேசிய தேர்தல்களில் வெற்றிப் பெறுவதற்கு அவர் முன்னோடியாக செயற்பட்டார். பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தனிப்பட்ட முறையில் இணக்கம் தெரிவிப்பேன.


பொருளாதாரம் விவகாரத்தையும், தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் பொறுப்பை பஷில் ராஜபக்க்ஷ பொறுப்பேற்றார். பல நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் பொருனாதாரம் முன்னேற்றமடைந்தது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.


21 மாதங்களுக்க பிறகே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.


பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றம் வந்தவுடன் எரிபொருளின் விலையை குறைக்க அவர் ஒன்றும். கொரோனா தாக்கத்தினால் சுற்றுலாத்துறை சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


சுற்றுலாத்துறை சேவையில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





பஷில் வருவது நல்ல விடயம் தான் ஆனால் ஒன்றும் சூரர் அல்ல - அமைச்சர் விளக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு