அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் விஜய தர்ம அறக்கட்டளை மற்றும் பௌத்த விஹாரையினால் புதன்கிழமை (01) தொற்றாளர்களின் சிகிச்சைகான வைத்திய உபகரணங்களை கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் கையளித்தார்.
மேற்படி அன்பளிப்புகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் வண. வல்பொல பியனந்த நாயக்க தேரர் அவர்களால் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் வழங்கி வைக்கப்பட்டன.
அன்பளிப்புச் செய்யப்பட்ட உபகரணங்களில் பிபி ஃ எச்ஆர் தேவைகளுக்கு அவசியமான டெலிமெட்ரி திரை உபகரணங்கள், ஒட்சிசன் உபகரணம், 10 லீட்டர் ஒட்சிசன் பிறப்பாக்கி இயந்திரங்கள், ஒக்ஸிமேட்டர்கள் என்பன அடங்கியிருந்ததுடன் அவற்றின் பெறுமதி சுமார் 20,000 அமெரிக்க டொலர்களாகும். இந்த உபகரணங்கள் நாடளாவிய ரீதியிலுள்ள 12 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலை, மாராவில வைத்தியசாலை, ஹொரன வைத்தியசாலை, கிளிபிட்டிய வைத்தியசாலை, குருணாகல் வைத்தியசாலை, திருகோணமலை வைத்தியசாலை, பலபிட்டிய வைத்தியசாலை, அனுராதபுரம் வைத்தியசாலை, ஹோமாகம வைத்தியசாலை, மட்டக்களப்பு வைத்தியசாலை, கம்புருபிட்டிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலை என்பவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
அவசியமான நேரத்தில் உதவியமைக்காக ஜெனரல் ஷவேந்திர சில்வா அன்பளிப்புச் செய்த துறவிக்கும் அவரது பிரதிநிதிகளுக்கும் நன்றி பாராட்டு தெரிவித்ததுடன் இலங்கையில் கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய அமெரிக்க வாழ். நன்கொடையாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே , இராணுவ தலைமையகத்தின் ஆட்சேர்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மிஹிந்து பெரேரா, 582 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் காவிந்த பாலசூரிய, 583 வது பிரிகேட் தளபதி சங்க ஜயமஹா, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஷேன் குணவர்தன, 223 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவசம், 612 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க கருணாபால, கஜபா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம, இராணுவ விளையாட்டுத்துறை பணிப்பகத்தின் பணிப்பாளர் நளீன் பண்டாரநாயக்க, 231 வது பிரிவு தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி, 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு, இராணுவ பொது சுகாதார துறை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கிறிஸாந்த பெரேரா குறித்த வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..