10,May 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நயினாதீவு ஆலய நிர்வாகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர்.

அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மட்டுமே நித்திய பூஜைகள் இடம்பெறுகின்றன.

அத்துடன் அடியவர்களின் நேர்த்திகள் , அபிசேகங்கள் என்பன தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவை மீள ஆரம்பிக்கும் போது அடியவர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும். அதனால் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து உங்கள் வீடுகளில் இருந்தவாறு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 








நயினாதீவு ஆலய நிர்வாகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு