சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும்என்றும் அவர் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கண்காணிக்கும் நிறுவனங்களுக்கு 15 வீதமான முறைப்பாடுகளே கிடைப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழ்நிலையில் வீடுகளிலும் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றன. இது பற்றிய தகவல்கள் உரிய வகையில் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என்றும் அவர் கூறினார்.
சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை உரிய தரப்பிற்கு வழங்குமாறு சிறுவர் அதிகார சபையின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..