06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

ஜப்பானை மிரட்டும் டெல்டா வேரியண்ட்

ஒலிம்பிக் போட்டித்தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக டோக்யோ நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை பிரகடனத்தால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகின் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகரமான டோக்யோவில் 2020ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய போட்டிகள் 2021ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது.

பல்வேறு இடையூறுகளை கடந்து வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் தொடர் துவங்க உள்ளது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், அங்கு கொரோனா பரவல் காரணமாக அவசர நிலையை பிறப்பிப்பதாக அந்நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.


தற்போது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் ஜப்பானிலும் வேகமெடுத்துள்ளது. நேற்று (ஜூலை 8) மட்டும் அங்கு 896 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தினந்தோறும் 2,000 என்ற அளவில் உயரக்கூடும் எனவும் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டோக்யோவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அவசரநிலையின் போது உணவகங்கள், மதுபான விடுதிகளுக்கு நேரக் கட்டுப்பாடு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

டோக்யோவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதெ நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் தொடரை நடத்துவதற்கான செலவீனங்களும் அதிகரித்திருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்






ஜப்பானை மிரட்டும் டெல்டா வேரியண்ட்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு