இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த பாரிய மைல்கல்லை எட்டிய பின்னர் நாடு மீண்டும் முழுவதுமாக திறக்கப்படும் என்றும் கூறினார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் நேற்று புதிய சதோச கிளையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதை குறிப்பிட்டார்.
செப்டம்பர் மாதத்திற்குள், 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை போட்டு முடித்த நாடாக இலங்கை இருக்கும். அதன் பிறகு, இந்த நாடு திறந்திருக்கும் என்றார்.
மேலும், அடுத்த வாரம் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி முகக்கவசம் ஒன்றின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 Comments
No Comments Here ..