இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் நாட்டில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திய பின் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன்படி இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்படும்.
80 சதவீதமான ஆசிரியர்களுக்கு தற்போது முலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
No Comments Here ..