கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவ சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இன்று மதியம் 12 மணி முதல் ஒரு மணி வரையாக ஒரு மணி நேரம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, அரச பல்கலைக்கழக முறைமை நீர்த்துப்போகச் செய்யும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறு, கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வழங்குங்கள், கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவ சட்டமூலத்தை கிழித்தெறி, இலவசக் கல்வியை பாதுகாக்க இலங்கையராக ஒன்றிணைவோம், எதிர்கால மாணவர்கள் கடனாளிகளாக மாற வேண்டுமா? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாககளை தாங்கியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது உயர் கல்வியினை இராணுவ மயமாக்குவதையும் தனியார் மயமாக்குவதையும் எதிர்ப்போம் என்றும் ஜனநாயகம் மிக்க சமூகத்தினை கட்டியெழுப்புவோம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments
No Comments Here ..