16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

தனிமைப்படுத்தப்பட்ட சந்நிதியான் ஆசிரமத்தில் ஒருவருக்கு கொரோனா

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலய சூழலில்அமைந்துள்ள சந்நிதியான் ஆசிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆசிரமத்தில் சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நேற்றுமுன்தினம் அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து பொதுச் சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆசிரமம் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அங்கு பணியாற்றுபவர்கள் மற்றும் சந்திநிதி முருகன் ஆலயத்தைச் சேர்ந்தோரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் சந்நிதியான் ஆசிரமத்தில் பணியாற்றும் 51 வயதுடைய ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, சந்நிதியான் ஆசிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் செல்வச்சந்நிதி கலாமன்றத்தினால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அன்னதானம் வழங்கிவைக்கப்படுகிறது.





தனிமைப்படுத்தப்பட்ட சந்நிதியான் ஆசிரமத்தில் ஒருவருக்கு கொரோனா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு