தற்போதைய நிலைமையில் கொரோனா நிலைமை மேலும் தீவிரமடைந்தால் நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
இவ்வாறு ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை முழுமையாக தற்போது முடக்குவது எளிதானதல்ல. எனினும், தொற்றிலிருந்து மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால், நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
0 Comments
No Comments Here ..