நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளுக்கு அப்பால் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், சிலர் தங்களது சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், பொது மக்களின் இந்த செயற்பாடு பயனற்றது என்றும் பிரதமர் கூறினார்.
இதன்படி, இன்றும் நாளையும் கடுமையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும், நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் மக்களின் ஆதரவின்றி கோவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், முதல் மற்றும் இரண்டாவது அளவு மக்களுக்கு வழங்கப்பட்ட பிறகு, தேவைப்பட்டால், உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்களின்படி மூன்றாவது தடுப்பூசியைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.
எனினும், முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தடுப்பூசியை மறுத்தவர்கள் கூட தடுப்பூசி பெற கடுமையாக முயற்சிப்பதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்
0 Comments
No Comments Here ..