நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3000 சிறார்கள் உள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டம் முழுவதும் மேற்காெண்ட கணிப்பீட்டின் படி அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார் .
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மொத்த சனத்தொகையில் 23 சதவீத சிறார்கள் உள்ளனர். அதில் தாய் தந்தையரை இழந்த சிறார்கள், தாயை இழந்த சிறுவர்கள், தந்தை இழந்த சிறுவர்கள், பாட்டி தாத்தாவுடன் வாழும் சிறுவர்கள், நோயுற்ற சிறுவர்கள் உள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள காலப்பகுதிகளில் இவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க எவருமில்லை.
கணவனை இழந்த பெண்கள் 46 ஆயிரம் பேர் உள்ளனர் இவ்வாறானவர்களுக்கும் குழந்தைகள் உள்ளது . இவர்களின் கணவர் மரணித்ததாலும் கைவிட்டு சென்றாலும் அவர்களின் மூலம் பெற்று எடுத்து கொண்ட பிள்ளைகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் இவர்களின் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இச் சிறுவர்கள் பாடசாலை சென்று 8 ஆம் ஆண்டு வரை தங்களது கல்வி கற்று பொருளாதார பற்றாக்குறையால் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,
அவர்களின் உழைப்பில் வரும் வேதனம் மூலம் தங்களது குடும்பப் பாரத்தை குறைத்துக் கொள்ளலாம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் வாழும் மக்களின் குடியிருப்புகள் மிகவும் சிறிதாகவே உள்ளது. இதனால் எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த முடியாமை காரணமாக பாடசாலையிலிருந்து விலகுகின்றனர்.
சிலர் தங்களின் தந்தையர்களுக்கு உதவும் முகமாக நகரங்களுக்கு சென்று பணிபுரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவரின் கணிப்பீட்டில் இருந்து வெளியாகி உள்ளது.
இதனை தடுத்து நிறுத்த வேண்டுமானால் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தொண்டு நிறுவனங்களும் சிறுவர் பாதுகாப்பு நிறுவனங்களும் முன்வந்து நடவடிக்கை வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..