24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் முதன்முறையாக கொரோனாவுக்கு பலியான அம்பியூலன்ஸ் வண்டி சாரதி

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியான பி.ஏ. அமரஜீவ கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இதனால் இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அவரை அறிந்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமரஜீவா 17 வருடங்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வண்டி சாரதியாக பணியாற்றினார்.

அவர் பிறந்த இடம் நிவித்திகல. இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர், முன்னாள் அமைச்சர் ஜான் செனவிரத்ன மற்றும் பல அரசியல்வாதிகளின் சாரதியாக பணியாற்றினார்.

பின்னர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியாக 2006 இல் சேர்ந்தார்.

அவர் இறப்பதற்கு முன், ஏராளமான கொரோனா நோயாளிகளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்.

மேலும், அமரஜீவ சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார் மற்றும் அவரது இரத்தம் அவ்வப்போது மாற்றப்பட்டது என அவரது சகோதரர் ஒருவர் கூறினார்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (23) உயிரிழந்தார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் அம்பியூலன்ஸ் வண்டி சாரதியாக அமரஜீவ உள்ளமை குறிப்பிடத்தக்கது.





இலங்கையில் முதன்முறையாக கொரோனாவுக்கு பலியான அம்பியூலன்ஸ் வண்டி சாரதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு