04,Feb 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

டெல்டா தொற்றாளர்களுக்கு கோட்டாபய விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

கொரோனா டெல்டா பிறழ்வினால் பாதிக்கப்படுபவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாது மாரடைப்பு மற்றும் இதயம் பலவீனமடையக் கூடும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவு விசேட நிபுணர் கோட்டாபய ரணசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதனால் கொலஸ்ட்ரோல், அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு இருதய வலி ஏற்பட்ட சுமார் 20 நோயாளர்களை தான் பரிசோதனை செய்ததாக கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு எவ்வித கொரோனா நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை எனவும் ஆனால் இதயம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறினார்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை காலத்தில் இவ்வாறானதொரு நிலைமையை காண முடியவில்லை என அவர் குறிப்பிட்டார். எனவே இது மூன்றாவது அலையில் டெல்டா பிறழ்வின் மூலமே ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையினால் இளம் வயதுடைய மற்றும் மத்திய வயதுடைய நபர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்தார்.

அதனால் கொலஸ்ரோல், அதிக இரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு நோய் காணப்படும் நபர்களுக்கு இருதய வலி, மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் அதற்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்திய குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  





டெல்டா தொற்றாளர்களுக்கு கோட்டாபய விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு