பாரிய நெருக்கடிக்குள் இலங்கையர்கள் சிக்கித் தவிப்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வேளையில் அவர்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய உணவுப்பொருட்களை செயற்திறனான வகையில் பகிர்ந்தளிப்பதில் அரசாங்கம் தோல்வியடையும் வேளையில், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது என கரு ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோக்கிராம் சீனியின் சந்தை விலை 85 ரூபாயாக காணப்பட்டதுடன், போதுமானளவு சீனி கையிருப்பில் உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஆனால் நேற்று முன்தினம் சீனியின் சந்தைவிலை 40 ரூபாயினால் அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
No Comments Here ..