தென்னிலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அதற்கான அட்டையில் பதிவிட்டு சென்ற சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி - சங்கமித்தா வித்தியாலயத்தில் தடுப்பூசி நிலையத்திற்கு வருகைத்தந்து தடுப்பூசி பெறாமல் தடுப்பூசி அட்டையில் பதிவிட்டு செல்ல சிலர் முயற்சித்துள்ளனர்.
குறித்த மோசடியாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி எத்திலிகொட மற்றும் கொன்கஹ பிரதேசத்தை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அ
வர்கள் தடுப்பூசி நிலையத்திற்கு வருகைத்தந்து அட்டையில் மாத்திரம் பதிவிட்டு செல்லும் போது அங்கிருந்த சுகாதார அதிகாரி இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர்களை தடுத்து வைத்து பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..