23,Nov 2024 (Sat)
  
CH
அழகு குறிப்பு

மதுபானி சேலைகள் எண்ணத்தை வண்ணமாக்கும்

வடஇந்தியாவில் மட்டுமே பிரபலமான இவ்வகை சேலைகள் மெல்ல மெல்ல தென்னிந்தியப் பெண்களின் மனதையும் வசீகரிக்கத் துவங்கி விட்டது என்றே சொல்லலாம்.

இந்தியக் கலைகளில் பிரபலமான ஒன்று மதுபானி பெயிண்டிங் என்று சொன்னால் அது மிகையாகாது. பீகாரின் மிதிலா நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவை மதுபானி பெயிண்டிங்குகளாகும்.

இராமாயாணத்தில் ஜனக மஹாராஜா தனது மகள் சீதாவின் திருமணத்திற்கு ஓவியர்களை வரவழைத்து மதுபானி ஓவியங்களை வரைய வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. முதலில் சுவர்களையும், தரையையும் அலங்கரித்த இவ்வகை ஓவியங்கள் மெல்ல மெல்ல காகிதங்கள் மற்றும் துணிகளில் இடம் பெற ஆரம்பித்தன.

இவ்வகை ஓய்வியங்கள் பெரும்பாலும் ஏதாவது கருப்பொருளை விளக்கும் விதமாகவே வரையப்படுகின்றன. பெரும்பாலும், கிருஷ்ணர், ராமர், லஷ்மி, சிவன், துர்கா, சரஸ்வதி, சூரியன் மற்றும் சந்திர உருவங்களானது முக்கிய பாத்திரங்களாக வரையப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் ஜயாமெட்ரிகள் மற்றும் மேத்தமேட்டிகல் வடிவங்களும் மதுபானி ஓவியத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன.

இவ்வகை ஓவியங்கள் சேலைகளில் இடம் பெறும் போது அவற்றை மக்கள் பெரிதும் விரும்பி வாங்குவதற்கான காரணம் அதன் எளிமை மற்றும் இயற்கையான மூலப்பொருள்களான அரிசித்தூள், மஞ்சள், மகரந்தத்தூள் அவுரி இலைச்சாறு பல்வேறு பூக்கள், சந்தனம் மற்றும் தாவரங்கள் மற்றும் மரங்களின் இலைகளிலிருந்து பெறப்பட்ட வண்ணங்களை கொண்டு ஓவியம் தீட்டப்படுவதுமாகும்.

இவ்வகை வண்ணங்கள் மிகவும் அடர்த்தியாக இருப்பதுடன் பளிச்சென்றும் காட்சியளிக்கின்றன. மேலும், பர்ஷர்களுக்கு பதிலாக குச்சிகள் (தாவர), தீக்குச்சிகள் மற்றும் விரல்களையும் ஓவியங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

தந்திரிக், கோபர், பர்னி, கோத்னா மற்றும் கட்சினி என வேறுபட்ட ஸ்டைல்களைக் கொண்டவை இவ்வகை ஓவியங்களாகும்.

மதுபானி ஓவியங்களானது காட்டன் மற்றும் சில்க் சேலைகளில் மிகவும் அற்புதமாக தயாரிக்கப்படுவதுடன் பெண்களால் பெரிதும் விரும்பி வாங்கக்கூடிய சேலையாகவும் உள்ளது.

மதுபானி வேலைப்பாடானது சேலையின் முந்தி, ப்ளஸ்ட் மற்றும் பார்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்டு வருவது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

செமி சில்க் சேலைகளில் சிக்கலான மதுபானி ஓவியங்களை கைகளால் வண்ணம் பூசி முந்தி மற்றும் பார்டரில் அட்டகாசமாகத் தயாரிக்கப்படும் சேலைகளின் அழகை வார்த்தைகளால் கூற முடியாது.

இக்கத் மற்றும் மதுபானி ஓவியங்களை கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் பிரத்யேகமான சந்தேரி சேலைகளும் அற்புதம் என்றே சொல்லலாம்.

தூய டஸ்ஸர் சில்க் சேலைகளில் கைகலால் மதுபானி ஓவியங்கள் தீட்டப்பட்டு, முந்தி மற்றும் ப்ளட்ஸானது காட்டன் சில்க்கில் உருவாக்கப்படும் சேலைகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

உடல் நிறம் கருப்பு, பார்டர் மற்றும் முந்தியானது இரத்தச் சிவப்பு இதில் ஆங்காங்கே கோல்டன் மற்றும் சிவப்பு நிறங்களில் மதுபானி ஓவியங்களைக் கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் சேலைகளை திருமண வரவேற்பு மற்றும் பார்ட்களுக்கு அணிந்து சென்றால் அனைவரின் கவனமும் நம் பக்கம் திரும்பும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சேலையின் மேற்புறம் மதுபானி ஓவியங்கள் சேலையின் கீழ்ப்புறம் இக்கத் பார்டர்களுடன் ஆரஞ்சு மற்றும் கருமை நிறத்தில் வரும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

கைத்தறி கோட்டா சேலகளில் உடல் ஒரு நிறம் பார்டர் ஒரு நிறமாக இருக்க முந்தியில் மட்டும் மதுபானி ஓவியங்கள் அச்சிடப்பட்டு இணைக்கப்பட்டிருப்பது புதுமையாகவும் அழகாகவும் உள்ளது.

மதுபானி ஓவியங்களைத் தீட்டி வண்ணம் பூசிய பின்னரும், பிளெயினாக இருக்கும் இடங்களில் வண்ணங்களைப் பூசி நிரப்புவது அந்த ஓவியர் மற்றும் ஓவியத்தின் தனிச் சிறப்பாாகக் கூறப்படுகின்றது.

மதுபானி ஓவியத்தை எம்ராய்டிங் செய்தும் பிரிண்ட் செய்தும் சேலைகளில் பார்க்கும் பொழுது அது ஒருவிதமான அழகைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.

வடஇந்தியாவில் மட்டுமே பிரபலமான இவ்வகை சேலைகள் மெல்ல மெல்ல தென்னிந்தியப் பெண்களின் மனதையும் வசீகரிக்கத் துவங்கி விட்டது என்றே சொல்லலாம். அதற்குக் காரணம் டிசைனர் சேலைகளிலும் இந்த ஓவியங்கள் தனது முத்திரையைப் பதிக்கத் துவங்கி விட்டன.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மதுபானி சேலைகள் எண்ணத்தை வண்ணமாக்கும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு