கொரோனாவை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இம்மாதம் 1ஆம் திகதி முதல் நீக்கப்பட்டிருந்தது.
மேலும், 1 - 15ஆம் திகதி வரைக்குமான சில சுகாதார வழிகாட்டுதல்கள், மற்றும் 15 - 30ஆம் திகதி வரைக்கும் மற்றுமொரு சுகாதார வழிகாட்டுதல்கள் என இரு பிரிவுகளாக ஊரடங்கு நீக்கப்பட்டு இருந்தது.
எனினும் அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர வேறு நோக்கங்களுக்காக மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
மேலும், அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களும் தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போதுள்ள சில சுகாதார வழிகாட்டுதல்களை எவ்வாறு தளர்த்துவது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா(Shavendra Silva) கூறினார்.
சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் (Gotabaya Rajapaksa) தலைமையில் இன்று இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..