மதுபானச்சாலை உரிமம் வழங்குவதில் இடம்பெற்றதாக கூறப்படும் பெரும் மோசடி தொடர்பாக துறை சார்ந்த விசாரணை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுபான உரிமம் வழங்குவதில் உயரதிகாரியொருவர் 500 மில்லியன் ரூபா வரை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட கலால் திணைக்கள ஆணையாளர் கோப்புக்களை ஆராய்ந்தபோது, மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மதுபான உரிமங்கள் புதிதாக வழங்கப்படுவது மற்றும் புதுப்பிப்பதில் பெரும் மோசடி நடந்துள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் பதவிக்காலத்தில், 10 மதுபான உரிமங்களை நிதி அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரியொருவர் விற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிதி மோசடியுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் உயரதிகாரி ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேறி விட்டதாக குறிப்பிடப்படுகிறது. அந்த அதிகாரி தேசிய லொத்தர் சபையின் முக்கிய பொறுப்பை வகித்தபோது, அப்போதும் மோசடிக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார் என குறிப்பிடப்படுகிறது.
0 Comments
No Comments Here ..