இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான ஒத்துழைப்பு, சமூத்திர பாதுகாப்பு, இரு நாட்டு கடலோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான சமூத்திர வலயம் தொடர்பிலும் அதன் முக்கியதுவம்; குறித்தும் தோவால் எடுத்துரைத்துள்ளார்.
அதேபோல் இரகசிய தகவல்களை திரட்டும் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ தளவாடங்களை கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான புவி ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..