04,May 2024 (Sat)
  
CH
கனடா

DNA சோதனையில் கண்டுபிடித்த உண்மைகள்!

கனடாவின் கால்கரியில் 32 ஆண்டுகளுக்குமுன் கார் பார்க்கிங் ஒன்றில், இரண்டு பையன்கள், குழந்தை ஒன்று குப்பை போடும் கவர் ஒன்றிற்குள் கிடந்ததைக் கண்டுள்ளனர்.


அருகிலிருந்த பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த அந்த சிறுவர்கள், Bob Ward என்பவரிடம், சார் அங்கு ஒரு குழந்தை கிடக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். கையிலிருந்த பொருட்களை அப்படியே போட்டுவிட்டு ஓடோடிச் சென்று அந்த குழந்தையைத் தூக்கியிருக்கிறார் Bob.


அது அப்போதுதான் பிறந்த ஒரு பெண் குழந்தை. குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அந்த குழந்தையை Bob தூக்க, அது மகிழ்ச்சியில் குரல் எழுப்பியிருக்கிறது.


அந்த குழந்தையை அவரும் அவரது மனைவியும் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள்.


Teanna Elliot (32) என்ற அந்த பெண், தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதைத் தெரிந்துகொண்டாலும், தான் குப்பையில் வீசப்பட்ட வேண்டாத குழந்தை என்பதை தாமதமாகத்தான் தெரிந்துகொண்டிருக்கிறார்.



Submitted by Teanna Elliot

அந்த வேதனை, இளம்பருவ Teannaவை வாட்டி வதைக்க, கடும் மன உளைச்சலுடன்தான் இளமையை செலவிட்டிருக்கிறார்.


பின்னர் திருமணமாகி தனக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில், தனது பெற்றோரை தேடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது Teannaவுக்கு. DNA சோதனைகள் மூலம் வெவ்வேறு திசைகளிலிருந்த தனது தந்தையையும் தாயையும் கண்டுபிடித்திருக்கிறார் அவர்.


Teannaவின் தந்தைக்கு தனக்கு இப்படி ஒரு மகள் இருப்பதே தெரியாமல் இருக்க, ஆச்சரியமடைந்த அவரும் அவரது குடும்பத்தினரும் அவரிடம் பாசம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.


ஆனால், Teannaவின் தாயோ தான் வீசிவிட்டு வந்த குழந்தையை சந்திக்கப்போவதேயில்லை என்று எண்ணியிருந்த நிலையில், திடீரென ஒருநாள் அவர் கண்முன் அந்த மகள் வந்து நின்றதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.


அதிர்ச்சியும், மனக் குழப்பமும், குற்ற உணர்வுமாக அதை ஏற்றுக்கொள்ள அவர் தடுமாறிக்கொண்டிருக்க, தன்னை வேண்டாம் என்று அவர் வீசியெறிந்திருந்தாலும், அவர் மீது தனக்கு கோபமில்லை என்று கூறும் Teanna, 32 வருடங்களாக மனோ ரீதியாக அவர் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருந்திருக்கிறார், அதுவே அவருக்கு போதும் என்கிறார்.


அவரது பெற்றோர்களைக் கண்டுபிடித்த அந்த விடயமும், Teannaவுக்கு தன்னை எடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் மீதுதான் அன்பை அதிகப்படுத்தியுள்ளது.


யாரோ வேண்டாமென்று வீசியெறிந்துவிட்டுப்போன ஒரு குழந்தைய எடுத்து, தன் சொந்தப் பிள்ளை போலவே வளர்க்க வேண்டுமானால், அது சாதாரண மனிதர்களால் முடியாது, அதற்கு மிகச்சிறந்த மனிதர்கள் வேண்டும். அதுதான் என் பெற்றோர் என்று நெகிழ்கிறார் Teanna.





DNA சோதனையில் கண்டுபிடித்த உண்மைகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு