ஹக்மன, உடுப்பில்லகொட, மில்லகஹஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருமண விருந்தொன்றில் கலந்து கொண்ட 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ஹக்மன சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி மில்லகஹஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்துகொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, திருமண விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எழுந்தமாறான அன்டிஜன் பரிசோதனையின் போது மேலும் 17 பேர் கொரோனா தொற்றுடன் இனம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் பதினாறு வயதுக்குட்பட்ட எட்டு சிறுவர்கள் உள்ளனர். ஏனையவர்கள் பெரியவர்கள். தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சை மையங்களுக்கும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..