வவுனியாவில் 200 அடி உயர தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிக் தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்ட இளைஞர் (கணவன்) நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியைக் காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன், கடந்த ஜூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களைத் தாங்கி விட்டு மனைவியைக் கொண்டு சென்றுள்ளதாக வவுனியா பொலிஸில் கணவன் முறைப்பாடு செய்திருந்தார்.
0 Comments
No Comments Here ..