நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும்(05) இந்த அபாய நிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, ஊவா மாகாணத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பொலன்னறுவை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..