சிறிலங்கா அரசாங்கம் அஸ்தமனத்தை நோக்கிச் செல்கின்றது என்கிறார் மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Santhirasekaram).
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சொந்த அரசியல் தேவைக்காக பல்வேறு சித்து விளையாட்டுக்களை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்திக்காது செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டின் வளங்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படுதல் வருத்தம் அளிப்பதாகவும் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..