மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் எனச் சந்தேகிக்கப்படும் வைரஸ் நோயாயினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த ஒரு வாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கோவிட் தடுப்பு செயலணி கூட்டம் இன்று (27) மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
திடீரென எமது நாடு உட்பட உலகம் பூராக ஒமிக்ரோன் வைரசின் தாக்கத்தினால் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த விதத்தில் மேற்கு மாகாணமான கொழும்பு, கம்பஹா தவிர்ந்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
0 Comments
No Comments Here ..