13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதா? பிரதமரின் ஊடகப்பிரிவு விளக்கம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முறைப்பாடு செய்யப்படவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை.மேற்படி சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் “எனக்குத் தெரிந்த வகையில் தவறானவை” என்றும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகை பணம் களவாடப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் இரகசியமாக வங்கி அட்டையைப் பயன்படுத்தி கோடிக் கணக்கான பணத்தை களவாடியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.





பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதா? பிரதமரின் ஊடகப்பிரிவு விளக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு