19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இதற்கெல்லாம் காரணம் கோட்டாபய தலைமையிலான அரசாங்கமே! அமைச்சரவை இணைப்பேச்சாளர் ஏற்பு

எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

எரிபொருள் மற்றும் எரிவாயுவு கொள்வனவிற்காக நாடாளாவிய ரீதியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு பல இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமும் இடம்பெற்றுவரும் நிலையில் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றது. 

பொதுமக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் தமது பணிகளை சிரத்தையுடன் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அனைத்தையும் செய்துவருகின்றது.





இதற்கெல்லாம் காரணம் கோட்டாபய தலைமையிலான அரசாங்கமே! அமைச்சரவை இணைப்பேச்சாளர் ஏற்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு