மேஷம்
சலுகைகள் கிடைத்து சந்தோஷம் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும்.
ரிஷபம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வருவர். தொழில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
எதிர்பார்த்த காரியம் எளிதில் நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதர பாசம் கூடும். அலங்கார பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். கவுரவத்தை காப்பாற்றுவீர்கள். தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும் செயல்படுவீர்கள். கூட்டு தொழில் வெற்றி தரும்.
சிம்மம்
சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
கன்னி
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். தொழில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
துலாம்
புது முயற்சிகளில் வெற்றி பெறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளை வித்தவர்கள் விலகுவர். வரன்கள் வாயிற்கதவை தட்டும். வீடு கட்டும் பணி தொடரும்.
தனுசு
எதிரிகளின் பலம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபர்களால் தொல்லைகள் ஏற்படலாம். வாகன மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
மகரம்
இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கூட்டு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு.
கும்பம்
வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் வந்து சேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
மீனம்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.
0 Comments
No Comments Here ..