15,Jan 2025 (Wed)
  
CH
ஆரோக்கியம்

தைராய்டு பிரச்சனை! சரி செய்வது எப்படி?

தைராய்டு என்பது நாளமில்லா சுரப்பி. இது சில ஹார்மோன்களை உருவாக்கி வெளியிடுகிறது. வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த தைராய்டு அவசியம். சில நேரங்களில் இவை சரியாக வேலை செய்யாது. சில நேரங்களில் இவை பொதுவானவை. 


சிகிச்சையளிக்க கூடியவை. தைராய்டு என்பது என்ன அதை குணப்படுத்த உதவும் மூலிகைகள் என்ன என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவ நிபுணர் உஷாநந்தினி BSMS., MSc Biotech. Lotus women care hospitals, PCOS speciality centre, chennai.


தைராய்டு என்பது தோலின் கீழ் உங்கள் கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது நாளமில்லா அமைப்பின் ஒரு பகுதி. சில ஹார்மோன்களை உற்பத்தி செய்வதன் மூலம் உடலின் பல முக்கிய செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது.


தைராய்டு உடலில் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. உடலில் அனைத்து செயல்களும் செயல்பட வேண்டிய ஆற்றல் உண்ணும் உணவிலிருந்து மட்டுமே பெறப்படுகிறது. அப்படியெனில் வளர்சிதை மாற்றவேகம் சீராக இயங்க வேண்டும். அதற்கு தைராய்டு சுரப்பு சீராக இருக்க வேண்டும். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் அது முழு உடலையும் பாதிக்க செய்யும்.


உடலில் தைராய்டு ஹார்மோன்களின் அளவை சீராக வைக்க உடலில் ஒரு அமைப்பு உண்டு. முதலாவதாக மூளையின் ஒரு பகுதியின் கீழ் மேற்பரப்பில் ஹைபோதலாமஸ் என்று சொல்லகூடிய இடத்தில் தைராய்டு-வெளியிடும் ஹார்மோனை (TRH) சுரக்கிறது. 


இது பிட்யூட்டரி சுரப்பியின் ஒரு பகுதியை தைராய்டு தூண்டுதல் ஹார்மோனை சுரக்க செய்கிறது. இது (TSH) ஆகும். உடலில் போதுமான அளவு ஹார்மோன் இருந்தால் இந்த (TSH) ஆனது தைராக்ஸின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) வெளியிட தூண்டுகிறது.


பொதுவாக (TSH) அளவு கூடுதலாக இருந்து தைராக்ஸின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) இந்த அளவு குறையும் போது அது ஹைப்போதைராய்டு என்று அழைக்கப்படுகிறது.


தைராக்ஸின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) அளவு அதிகரிக்கும் போது அது ஹைப்பர் தைராய்டு என்றழைக்கப்படுகிறது.


இன்றைய நிலையில் ஹைப்போ தைராய்டு என்பது மரபணு காரணங்களால் வருகிறது. இதை தாண்டி நம் அன்றாட பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உணவு முறைகளில் மாற்றங்கள், தூக்க நேரம் மாற்றம், இவையெல்லாம் மூளையில் இருந்து தைராய்டு சுரப்புக்கு வரும் (TSH) ஆனது அதிகரிக்கிறது. தைராக்ஸின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) அளவு குறைகிறது.


சிலருக்கு (TSH) மட்டும் அதிகமாக இருக்கும். ஆனால் (T3) (T4) குறைவாக இருக்கும். இவர்கள் மருந்துகள் எடுக்க வேண்டியதில்லை. சிறு சிறு பயிற்சிகள் மூலம் இவர்கள் தைராய்டு சுரப்பியை சீராக்க முடியும்.


அன்றாட பழக்க வழக்கங்கள், யோகா பயிற்சிகள், உணவு முறை, தூக்க முறை எல்லாவற்றையும் கடைப்பிடித்து இந்த (TSH) அளவை சரி செய்ய முடியும். இதை கவனிக்காமல் விடும் போது தான் அடுத்து (T3) (T4) அளவு குறைந்துவிடுகிறது. இதற்கு சித்த மருத்துவ சிகிச்சை என்ன என்பதையும் பார்க்கலாம்.


தைராய்டுக்கு சித்த மருத்துவ மூலிகை என்ன?


வாதம், பித்தம், கபம் மூன்றும் சீராக இருக்க வேண்டும். வாதமும், கபமும் அதிகரிக்கும் போது தான் தைராய்டு பிரச்சனை வருகிறது. இது கழற்சி கழலை என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அப்படியெனில் வாத கபத்தை சமநிலைப்படுத்த சித்த மருத்துவம் மூலிகைகளை பரிந்துரைக்கிறது. 


அதில் ஒன்று தனியா ஊறல் குடிநீர். தனியா ஊறல் குடிநீர் தைராய்டுக்கு எப்படி உதவுகிறது என்பது குறித்து தனியாக விளக்கமாக பார்த்திருக்கிறோம். அந்த லிங்க் இங்கு இணைக்கிறேன். தனியா ஊறல் நீர் தைராய்டுக்கு உதவும் சிறந்த மூலிகையாக சித்த மருத்துவம் பரிந்துரைத்துள்ளது.


வல்லாரை (T4) ஹார்மோன் சுரப்பு சீராக்க உதவுகிறது. வல்லாரை பொடியை வாங்கி தினசரி காலை வேளையில் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் கலந்து எடுத்து வர வேண்டும். 


தைராய்டு அளவு சீர் செய்யும் வாய்ப்பு அதிகம்.

தைராய்டு சுரப்பு சீராக இருக்க யோகாசனங்கள் முக்கியம்?

தைரய்டு சுரப்பு சீராக இருக்க பயன் தரக்கூடிய யோகாசன பயிற்சிகள் செய்ய வேண்டும். 


காலையில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். இதனோடு புஜங்காசனம், உஷ்த்ராசனா, நாடி சுத்த பிராணயாமா பயிற்சிகள், உணவியல் முறை , வாழ்வியல் முறை மூலமாக சரி செய்துவிடலாம். இது தைராய்டு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தைராய்டு சுரப்பு சீராக இருப்பவர்களும் செய்யலாம்.





தைராய்டு பிரச்சனை! சரி செய்வது எப்படி?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு