கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாளின் போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஈரானிய நடிகையான மஹ்லாக ஜபேரி.
கடந்த ஆண்டு நடந்த திரைப்பட விழா ஒன்றில் உக்ரேனிய கொடியை உடலில் வரைந்து கொண்டு ரஷ்யாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார். அதே போல இந்த ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்ட மஹ்லாக ஜபேரி அணிந்திருந்த கருப்பு உடையில் கீழே மரண தண்டனையை நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
அவருடைய உடையைப் பார்த்த ஊடகத்தினர் பரபரப்பானார்கள். சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அவர் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
அதில் ஈரானிய மக்களுக்கு இதனை அர்ப்பணிக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இதனால் ஈரானில் நடக்கும் மரண தண்டனைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
0 Comments
No Comments Here ..