சுட்டெரிக்கும் கோடை வெயில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடலைக் குளிர்ச்சியாக்க வைத்திருக்கவும் வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் சில உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் உட்கொள்ளும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தோடு, சம்பந்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
உடல் வறட்சியிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் விதைகள் பற்றி இங்க தெரிந்துகொள்ளுங்கள்.
ஏலக்காய் விதைகள் செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் நெஞ்செரிச்சலை குறைக்கிறது. உடலைத் தளர்த்தவும், குமட்டல் ஏற்படும்போதும் ஏலக்காய் உண்ணப்படுகிறது. மேலும், இந்த விதைகள் வாயின் புத்துணர்ச்சிக்கும் பயன்படுகிறது. ஏலக்காயை கொண்டு தயாரிக்கப்படும் டீ-யை குடிப்பது, உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். குறிப்பாக அவற்றை ஐஸ்கட் டீ தயாரிப்பதிலும் பயன்படுத்தலாம்
சீரக விதைகள் உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுவதோடு, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதகிறது. இந்த விதைகளை உட்கொள்வது மிகவும் எளிதானது. இதை நீங்கள் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் உட்பட உங்கள் அன்றாட சமையலிலும் பயன்படுத்தலாம்.
சீரகத் தண்ணீரைச் செய்தும் குடிக்கலாம். சீரக நீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் சீரகத்தை ஊறவைத்து சிறிது நேரம் கழித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
துளசி விதைகள் சப்ஜா என்றும் அழைக்கப்படும் துளசி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும், வயிற்றை குளிர்விக்கும். துளசி விதைகளை காய்கறிகளை ஸ்மூத்திகள், ஷேக்ஸ் மற்றும் ஃபலூடாவில் சேர்த்தும் சாப்பிடலாம்.
வெந்தய விதைகள் மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தய விதைகளை கோடையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த விதைகள் உடல் வெப்பநிலையை அதிகமாக அதிகரிக்க அனுமதிக்காது. வெந்தயத்தை இரவு முழுவதும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி குடிக்கலாம்.
இந்த நீரை சிறிது சூடுபடுத்தியும் குடிக்கலாம். கொத்தமல்லி விதைகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குளிர்ச்சியைப் பெற கொத்தமல்லி விதைகளை உட்கொள்ளலாம். இந்த விதைகளை தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம் அல்லது கொத்தமல்லி விதைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட தேநீர் குடிப்பதும் நன்மை பயக்கும்.
0 Comments
No Comments Here ..